search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலேசிய இறக்குமதி"

    தூத்துக்குடி துறைமுகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மலேசிய மணலுக்கான கொள்முதல் தொகையை செலுத்தியதையடுத்து, அதனை விற்பனை செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. #MalaysianSand #SupremeCourt
    புதுடெல்லி:

    மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள 55 ஆயிரம் டன் மணலுக்கான கொள்முதல் தொகையை டன்னுக்கு ரூ.2050 வீதம் செலுத்தும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பணம் செலுத்த தாமதம் ஆனது.

    இதையடுத்து இவ்வழக்கு கடந்த மாத இறுதியில் விசாரணைக்கு வந்தபோது, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அக்டோபர் 1-ம் தேதி நேரில் ஆஜராகும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.



    அதன்படி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி இன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி, தமிழக அரசு சார்பில் மணலுக்கான தொகையை ரூ.10.56 கோடியை வழங்கினார். அத்துடன் மணலை உடனே விற்பனை செய்ய அனுமதி அளிக்கும்படி தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற உச்ச நீதிமன்றம், மலேசிய மணலை விற்பனை செய்ய தமிழக அரசுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. #MalaysianSand #SupremeCourt
    ×